மகளிர்மணி

அவல் தரும் நன்மைகள்!

அவல் நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. தொன்றுதொட்டு  நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது. அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்.

எல்.மோகனசுந்தரி

அவல் நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. தொன்றுதொட்டு  நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது. அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இதில் வெள்ளை மற்றும் சிவப்பு  நிறத்தில்  தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தைச் சார்ந்தது.

வெள்ளை அவல்:

வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

சிவப்பு அவல்:

சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக உள்ளது.

அவலின் சிறப்பம்சங்கள்:

வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள். அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.

அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும். உடலின் சூட்டைத் தணிக்கும், செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும்.

ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். புற்றுநோய் உண்டாக்கும் செல்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவுப்பொருள். சீதபேதி போன்ற நோய்களை தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT