மகளிர்மணி

கேரட் ஆரஞ்சு ஜூஸ்

கேரட் மற்றும்  இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.   பின் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.

ஏ. காந்தி

தேவையானவை:

கேரட் - 1
ஆரஞ்சு - 2
எலுமிச்சம் பழம் - அரை பழம்
சர்க்கரை - 4 மேஜைகரண்டி
இஞ்சி - 1துண்டு
ஐஸ்க்யூப்ஸ்- தேவைக்கேற்ப

செய்முறை: 

கேரட் மற்றும்  இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.   பின் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவு தண்ணீர்விட்டு சர்க்கரையைச் சேர்த்து  மிதமான சூட்டில் பாகு காய்ச்சவும்.  பின்னர்,  கேரட் மற்றும் இஞ்சியை மிக்ஸியிலிட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். 

பின்பு ஒரு  ஜூசர்  மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை  பிழிந்து எடுத்து, கேரட்  சாறுடன் கலக்கவும்.  அதனுடன்  எலுமிச்சை சாறு மற்றும்  சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து  நன்கு கலந்து விடவும். அதனுடன் தேவைக்கேற்ப ஐஸ் கியூப்ûஸ சேர்க்கவும். தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரை சிரப்புக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT