மகளிர்மணி

ஃப்ரூட் மிக்ஸர்

ஏ. காந்தி

தேவையானவை 

வாழைப்பழம் - 3
சப்போட்டா பழம் - 1
தர்பூசணி பழம் - அரை பழம்
பப்பாளி பழம் - கால் கிண்ணம்
மாதுளம் பழம் - கால் கிண்ணம்
மாம்பழம் - 1
அண்ணாசி பழம் - 1
திராட்சை - 10-12
பேரீச்சம் பழம்- 10-12
சர்க்கரை - தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் - தேவைக்கேற்ப 
ஆரஞ்சு சிரப் - கால் மேஜைகரண்டி

செய்முறை: 

வாழைப்பழம், அண்ணாசி, மாதுளம், பப்பாளி, மாம்பழம், சப்போட்டா மற்றும் தர்பூசணி பழங்களை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.  பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.  பின்னர், அடி கனமான பாத்திரத்தில் ஒரு கிண்ணம் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கிண்ணம் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரையை நன்கு கரைத்து விடவும். சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பின்பு சிறிதளவு தண்ணீரை சுட வைத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பேரீச்சம் பழத்தை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை ஊற விட்டு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். 

பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தர்பூசணி பழத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.  அதை  வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். (வேண்டு மென்றால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)அடுத்து வேறு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பழத்தை போட்டு அதை நன்கு மசித்து விடவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள பழக்கலவையையும்,  பேரீச்சம்பழத்தையும் சேர்த்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதனுடன் ஆரஞ்சு சிரப்பையும் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.  அதனுடன் தர்பூசணி பழச்சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (தர்பூசணி பழச்சாறை விரும்பாதவர்கள் வெறும் தண்ணீரைச் சேர்த்து கொள்ளலாம்.) இதனுடன்  ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT