முகப்பு
மகளிர்மணி

பேரீச்சம் பழ கேக்

முதலில் மைதா மாவைச் சலித்து கொண்டு வெண்ணெயைச் சேர்த்து, ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்க வேண்டும்.

Updated On : 24 டிசம்பர், 2022 at 9:45 PM
பகிர்:

தேவையானவை:

வெண்ணெய்-250 கிராம்
மைதாமாவு- 400 கிராம்
பேரீச்சம் பழம்- 250 கிராம்
பொடி செய்த சர்க்கரை- 200 கிராம்
சமையல் சோடா- 2 மேசைக்கரண்டி
அக்ரூட் பருப்பு- 4 மேசைக் கரண்டி
பேகிப் பவுடர்- 2 தேக்கரண்டி
பால்- சிறிதளவு

செய்முறை: 

Advertisement

முதலில் மைதா மாவைச் சலித்து கொண்டு வெண்ணெயைச் சேர்த்து, ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்க வேண்டும். துண்டுகள் செய்த அக்ரூட், கொட்டை நீக்கி துண்டுகளாக்கி பேரீச்சம்பழம், பொடித்த சர்க்கரையுடன் சேர்த்து மாவுடன் கலக்கிக் கொள்ள வேண்டும். சமையல் சோடா, பேகிங் பவுடர் இவற்றைப் பாலில் போட்டு நன்றாகக் கலக்கி, அதையும் சேர்க்க வேண்டும். இக்கலவையை ஒன்பது அங்குல பேக் செய்யும் வட்டத் தட்டில்  போட்டு நெய் தடவிய மாவு தூவிய தட்டில் வைக்க வேண்டும். இதை சுமார் ஒரு மணி நேரம் சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.