மகளிர்மணி

மைசூர் மாங்காய் சாதம் 

லோ. சித்ரா

தேவையானவை:

அரிசி - 100 கிராம்
மாங்காய்த் துருவல் - 1 சிறு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - கால் தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 8
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

சாதத்தைக் குழையாமல் பக்குவமாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மாங்காய், தேங்காய், காய்ந்த மிளகாய், கடுகு தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்து சாதத்தின் மீது போட்டு வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பைச் சிறிய துண்டுகள் செய்து நெய்யில் வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தபின் வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் , கடலைப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பெருங்காயம், வெந்தயம், மஞ்சள் சேர்த்து தாளித்து அதில் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து அதனுடன், உப்பு மற்றும் சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT