மகளிர்மணி

காந்தக்குரல்  அழகி!

ஆங்கில இசை உலகில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமாக வலம் வருகிறார் ஜெனிபர் லோபஸ். 52 வயதான போதிலும் அவரது அழகும், காந்தக் குரலும் ரசிகர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆ. கோ​லப்​பன்


ஆங்கில இசை உலகில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமாக வலம் வருகிறார் ஜெனிபர் லோபஸ். 52 வயதான போதிலும் அவரது அழகும், காந்தக் குரலும் ரசிகர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஜே.லோ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெனிபர், நியூயார்க்கில் பிறந்தார். தனது 19ஆவது வயதில் பாடுவது, ஆடுவது என திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், சட்ட அலுவலகத்தில் வேலை, நடன வகுப்புகள் மற்றும் மன்ஹேட்டன் இரவு விடுதிகளில் நடனம் என ஒரு நாளில் பலவேலைகளை செய்தார்.

ஹாலிவுட்டில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்த விரும்பிய ஜெனிபர், தனக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார். சில வருட காத்திருப்புக்குப் பின்பு 1987ஆம் ஆண்டு "மை லிட்டில் கேர்ள்' என்ற திரைப்படத்தில், சிறிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தனது நடிப்பு பெரிதாகப் பேசப்படாத நிலையில், நடனக் கலைஞராகப் பல்வேறு ராப் இசை வீடியோக்களில் ஜெனிபர் நடன மாடினார். "அனகோண்டா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தப் படத்தில் அவரது நடிப்பையும், அழகையும் கண்ட ரசிகர்கள் யார் இந்தப் பேரழகி என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஜெனிபர் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் "ஆன்தம்', 1999ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள் வெளியானது. 20க்கு மேற்பட்ட திரைப்படங்கள் என வளர்த்தார் ஜெனிபர். ஆடை வடிவமைப்பு, சென்ட் தயாரிப்பு, படத்தயாரிப்பு என தனக்குப் பிடித்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தார்.

பெண்களுக்கான திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவிடம் இருந்து விருது பெற்றார் ஜெனிபர்.

குழந்தைகளை பெரிதும் தாக்கும் கக்குவான் இருமலுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவித்து, உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஜெனிபரின் குரலை போலவே அவரது சமூகத் தொண்டும் நாடு கடந்து போற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT