முகப்பு
மகளிர்மணி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்

கிழங்கை நன்றாக கழுவி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:


தேவையானவை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு  - 200 கிராம்
தேங்காய்த் துருவல்  -  4 தேக்கரண்டி
மிளகாய் வத்தல்  - 2
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய்  - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
கடுகு , உளுந்து - சிறிது 

செய்முறை

கிழங்கை நன்றாக கழுவி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து அதில் மிளகாய்வத்தல், பெருங்காயம், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அதில் வேகவைத்த கிழங்கைச் சேர்த்து  தேங்காய்த் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.  சர்க்கரை வள்ளிக்கிழங்கு  பொரியல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.