மகளிர்மணி

ரவை பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

ரவை -  300 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
முந்திரிப்பருப்பு  - 25 கிராம்
மிளகு  - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
எலுமிச்சைச்சாறு  - 1தேக்கரண்டி
நெய் -  100 மி.லி
கறிவேப்பிலை - 1பிடி
உப்பு  - தேவையானது

செய்முறை:  

முந்திரிப் பருப்பை  ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.  பயத்தம் பருப்பை கால்  பதம் வேகவைத்து  நீரை வடித்து  வைக்க வேண்டும்.  வடித்த நீரில் ரவையை வேக வைத்துக் கொள்ளலாம். வாணலியை  அடுப்பில்  வைத்து நெய்யை ஊற்றிக் காயவிட்டு  மிளகு,  சீரகத்தைப் போட்டு  துருவிய  இஞ்சியைப் போட்டு தேவையான  தண்ணீர்விட்டு பருப்பு தண்ணீரையும்  விட்டு உப்பு போட்டு கொதிக்க  விட வேண்டும் ரவையைப்  போட்டு வெந்ததும் பயத்தம் பருப்பை போட்டு  கிளறி  எலுமிச்சைச் சாறுவிட்டு  கீழே  இறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

SCROLL FOR NEXT