முகப்பு
மகளிர்மணி

பனீர்  பராத்தா 

கோதுமை மாவுடன் துருவிய பனீர், நறுக்கிய வெங்காயம், கரம், மசாலா, சீரகம், உப்பு, சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

Updated On : 19 ஜனவரி, 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

தேவையானவை:

கோதுமை மாவு - 1 கிண்ணம்
துருவிய பனீர் - அரை கிண்ணம்
வெங்காயம் நறுக்கியது - 1
சீரகம் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
நெய், உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

Advertisement

கோதுமை மாவுடன் துருவிய பனீர், நறுக்கிய வெங்காயம், கரம், மசாலா, சீரகம், உப்பு, சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசையவும். ஊற வைக்க தேவையில்லை. சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சுட்டெடுத்ததும், சப்பாத்திகள் மீது நெய் தடவி வைக்கவும். மிருதுவாக இருக்கும். தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.