கடலை பிரட் ரோஸ்ட்
கடலை, மைதா மாவு, இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை கெட்டித் தயிருடன் கலந்து, பிரட் துண்டுகளின் தடவி தோசைக் கல்லில் நெய் விட்டு டோஸ்ட் செய்யவும்.
தேவையான பொருள்கள்
கடலை மாவு - 1/4 கிண்ணம்
மைதா மாவு - 1/4 கிண்ணம்
இஞ்சி விழுது - 1/4 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
சீரகத்தூள் - 1/4 மேஜை கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 மேஜை கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
கெட்டித் தயிர் - 1/4 கிண்ணம்
பிரட் துண்டுகள் - 4
நெய் - தேவையான அளவு
செய்முறை :
கடலை மாவு , மைதா மாவு , இஞ்சி விழுது, உப்பு , பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை கெட்டித் தயிருடன் கலந்து , பிரட் துண்டுகளின் இருபுறமும் தடவி தோசைக் கல்லில் நெய் விட்டு டோஸ்ட் செய்து சாப்பிடவும். வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.