முகப்பு
மகளிர்மணி

ராகி, பச்சைப்பயறு தோசை

ராகி,  பாசிப்பயறு,  வெந்தயத்தை தண்ணீரில் நன்றாகக் அலம்பி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

தேவையான பொருள்கள்

ராகி - 1/2 கிண்ணம்
பச்சைப் பயறு - 1/2  கிண்ணம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4  தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:  

ராகி,  பாசிப்பயறு,  வெந்தயத்தை தண்ணீரில் நன்றாகக் அலம்பி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.  மறுநாள் காலையில் இதனுடன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு,  ஒரு பாத்திரத்தில் அதை மாற்றிக்கொண்டு தோசை மாவு பதத்துக்கு கலந்து , அரைத்த உடனேயே தோசை செய்யலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →