முகப்பு
மகளிர்மணி

தேங்காய் பணியாரம்

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை 
கிண்ணம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு- 1 சிட்டிகை
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:  

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் அரைக்கவும். பின்பு, மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சிறு உருண்டைகளாகப் போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

முழு கட்டுரையைப் படிக்க →