முகப்பு
மகளிர்மணி

பயற்றம் பருப்பு அடை 

தேங்காயைத்  துருவிக் கொள்ளவும்.  அரிசி,  வெந்தயம் இரண்டையும்  சேர்த்து ஊற வைத்து. பயற்றம் பருப்பைத் தனியாய் மற்றொரு பாத்திரத்தில் ஊற வைத்து. அரிசி சுமார்  அரைமணி  நேரம்  ஊறின பின் களைந்து  கல் அரித்து

Updated On : 2 மார்ச், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:02 PM

தேவையானவை:

புழுங்கல் அரிசி  - 200 கிராம்
பயற்றம் பருப்பு -  1 தேக்கரண்டி
வெந்தயம்  - கால்  தேக்கரண்டி
தேங்காய்  - 1 மூடி
கொத்துமல்லி  -  சிறிய கட்டு
மிளகாய் வற்றல்  -  4
பெருங்காயம்  - சிறிதளவு
கறிவேப்பிலை  - சிறிதளவு
உப்பு  -  தேவையான  அளவு
எண்ணெய்  -  50 கிராம்


செய்முறை:  

Advertisement

தேங்காயைத்  துருவிக் கொள்ளவும்.  அரிசி,  வெந்தயம் இரண்டையும்  சேர்த்து ஊற வைத்து. பயற்றம் பருப்பைத் தனியாய் மற்றொரு பாத்திரத்தில் ஊற வைத்து. அரிசி சுமார்  அரைமணி  நேரம்  ஊறின பின் களைந்து  கல் அரித்துத் தண்ணீரை வடியவிட்டு,  பயற்றம் பருப்பு,   அத்துடன் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து  அரைக்கவும். சற்று மசிந்தபின்  தேங்காயைச் சேர்த்து அரைக்கவும். பின்னர்,  அடைமாவில் கொத்துமல்லியை  பொடியாய்  நறுக்கிச் சேர்த்து  அடை தயாரிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.