முகப்பு
மகளிர்மணி

வாழைப்பூ அடை 

அரிசியையும் பருப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து. காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொர கொரப்பாக அரைக்கவும்.

Updated On : 2 மார்ச், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:02 PM

தேவையானவை

நறுக்கிய வாழைப்பூ - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
துவரம் பருப்பு - 6 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 3 மேசைக் கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

Advertisement

அரிசியையும் பருப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து. காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொர கொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்துமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 மேசைக்கரண்டி எண்ணெய்யில் வாழைப்பூவை வதக்கி. அதையும் மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி. ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும். திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.