மிளகுக் குழம்பு
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, தனியா, பருப்பு, வெந்தயம், ஜீரகம், மிளகாய் இவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேவையானவை:
புளி - எலுமிச்சை அளவு
மிளகு - 1 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
ஜீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - 1மேசைக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, தனியா, பருப்பு, வெந்தயம், ஜீரகம், மிளகாய் இவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெய்யில் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். புளியை 3 கப் நீர்விட்டு கரைத்து, கடுகு தாளிப்பில் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், வறுத்து வைத்துள்ளவற்றை நன்றாகப் பொடி செய்து குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய்ப் பிரிந்து வரும் சமயத்தில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவிடவும். சுவையான மிளகு குழம்பு தயார்.