மகளிர்மணி

திருப்பூர் பெண்ணுக்கு பாராட்டு!

DIN

தமிழ் நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை சின்னவீரன் பட்டி பகுதியில் வசிக்கும் தாயம்மாளுக்கு சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. இவரது குடும்பம் பல ஆண்டுகளாக இளநீர் விற்று பிழைப்பு நடத்தி வருகிறது. இவர்களது நிதிநிலைமை சரியில்லாமல் இருந்தாலும் தாயம்மாள் தனது மகனுக்கும், மகளுக்கும் கல்வி கற்பதற்கான எந்த வாய்ப்பு தட்டிப் போய்விடக் கூடாது என்று நினைத்தார்.

அவரது குழந்தைகள் சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தனர். 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள அந்தப் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால் மேல்நிலைக் கல்வி வரை அங்கு நடத்த முடியும் என்று அறிந்த தாயம்மாள், பள்ளியின் சீரமைப்புக்காக, ரூபாய் 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். தாயம்மாளை திருப்பூர் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் நேரில் அழைத்து வாழ்த்தினர்.

இது பிரதமரின் பார்வைக்குச் செல்ல, அவரது "மான் கி பாத்' உரையாடலில், " தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த, இளநீர் விற்கும் தாயம்மாள், அவரின் குடும்பத்தினருக்கு என் பாராட்டுகள், குடும்பத்தின் வறுமை நிலையிலும், பள்ளிக்கு 1 லட்சம் நன்கொடையாக வழங்க மிகப்பெரிய மனம் வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT