மகளிர்மணி

பொட்டுக்கடலை : பயன்கள்

பொட்டுக் கடலையை மிக்ஸியில் பொடி செய்து வைத்துகொண்டால் பலவிதங்களில் கை கொடுக்கும்.

பொட்டுக் கடலையை மிக்ஸியில் பொடி செய்து வைத்துகொண்டால் பலவிதங்களில் கை கொடுக்கும்.

எல்லாவித முறுக்கு, நாடா பக்கோடா போன்றவற்றில் இந்தப் பொடி சேர்த்து வெண்ணெய் கலந்து செய்ய சுவை அதிகரிக்கும்.

இட்லி, மிளகாய் பொடி, பருப்புப் பொடி தயாரிக்கும்போது காரம் அதிகமாகிவிட்டால் இந்தப் பொடியை கொஞ்சம் கலந்தால் காரம் தெரியாது.

இந்தப் பொடியை இலேசாக வறுத்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து காய்ச்சிய நெய், வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்க ஈஸியான ஸ்நாக்ஸ் எளிதில் செய்யலாம்.

கூட்டு, சாம்பார் போன்றவை நீர்த்துப் போயிருந்தால் இந்தப் பொடியை நீரில் கரைத்து கொதிக்க வைத்தால், கெட்டியாகிவிடும்.

கட்லெட் செய்யும்போது ரஸ்க் பொடியுடன் பொட்டுக் கடலைப் பொடியை எண்ணெயில் பொரிக்க கூடுதல் க்ரிப்பாகவும், நீண்ட நேரத்துக்கு மொறு, மொறுவென்றும் இருக்கும்.

ரவா தோசை, கோதுமை தோசை ஆகியவற்றை கரைக்கும்போது, பொட்டுக்கடலைப் பொடியைக் கலந்து தோசை ஊற்ற நன்கு சிவந்து, இனிப்பாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர்! சரிபார்ப்புக்கான ஆவணமாக 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்க மறுப்பு!

பொங்கல் கொண்டாட்டம்! நடனமாடி மகிழ்ந்த தமிழிசை சௌந்தரராஜன்!

அமலாக்கத் துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரம்: மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 52 நக்சல்கள் சரண்!

போடி தொகுதியில் போட்டி? ஓபிஎஸ் பேட்டி!

SCROLL FOR NEXT