முகப்பு
மகளிர்மணி

மசாலா இட்லி

மினி இட்லி வேக வைத்து எடுக்கவும். கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

தேவையானவை:

இட்லி மாவு- 4 கிண்ணம்
கொத்தமல்லித் தழை- 1 கட்டு
பச்சை மிளகாய்- 4
தேங்காய் துருவல்- 3 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- கால் தேக்கரண்டி
நெய்- 1 மேசைக் கரண்டி
புளி- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

மினி இட்லி வேக வைத்து எடுக்கவும். கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். பின்னர், அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி சட்னி, இட்லிகளைப் போட்டு கிளறி எடுக்கவும்.

எம். எஸ். லட்சுமி வாணி

முழு கட்டுரையைப் படிக்க →