பூந்தி லட்டு
கடலை, அரிசி மாவுகளை சலித்துக் கொண்டு அத்துடன் பேக்கிங் பவுடரையும் போதுமான தண்ணீரையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
கடலை மாவு- 1 கிண்ணம்
அரிசி மாவு- 1 மேசைக் கரண்டி
சர்க்கரை- 2 கிண்ணம்
முந்திரிப் பருப்பு- 1 மேசைக் கரண்டி
கற்கண்டு- 1 தேக்கரண்டி
கிராம்பு- 6
நெய்- 1 மேசைக் கரண்டு
ஏலப்பொடி- 1 தேக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி- 1 சிட்டிகை
கேசரி கலர்- அரை சிட்டிகை
பேக்கிங் பவுடர்- 1 சிட்டிகை
குங்குமப்பூ- 1 சிட்டிகை
சமையல் எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
கடலை, அரிசி மாவுகளை சலித்துக் கொண்டு அத்துடன் பேக்கிங் பவுடரையும் போதுமான தண்ணீரையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து பூந்திக் கரண்டியால் பூந்தி தயாரிக்கவும்.
பொன்னிறமாக எடுத்து வடி கூடையில் போடவும். அரைக் கம்பி பதத்துக்கு சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். முந்திரித் துண்டுகளையும் திராட்சையையும் பொரிக்கவும். இவற்றையும் பொரித்த பூந்தி, கிராம்பு, ஏலப்பொடி, கல்கண்டு, குங்குமப்பூ, ஜாதிக்காய்ப் பொடியையும் பாகில் சேர்க்கவும். கைகளில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளைப் பிடிக்கவும்.