முகப்பு
மகளிர்மணி

தக்காளி பிரெட் உப்புமா 

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிரெட் துண்டுகளின் இருபுறமும் எண்ணெய் தடவி, சிறு தீயில் வைத்து தோசைக் கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

தேவையான பொருள்கள்:

உப்பு பிரெட்- 8 துண்டுகள்
எண்ணெய்- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்- 2
தக்காளி-2
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
மல்லித் தழை- சிறிதளவு
உப்பு- தேவைக்கேற்பு
கடுகு- அரை தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்- 2 மேசை கரண்டி

செய்முறை: 

Advertisement

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிரெட் துண்டுகளின் இருபுறமும் எண்ணெய் தடவி, சிறு தீயில் வைத்து தோசைக் கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வதக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதக்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்குங்கள். அத்துடன் கால் கிண்ணம் தண்ணீர் சேருங்கள். நன்கு கொதித்ததும் வறுத்த பிரெட் துண்டுகள் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.