முகப்பு
மகளிர்மணி

தக்காளி சீஸ் ஊத்தப்பம் 

தக்காளியைப் பொடியாக நறுக்கி ஒரு கப்பில் போட்டு, அத்துடன் நறுக்கிய குட மிளகாய் துருவிய சீஸ், கொத்துமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டு கலந்து வைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தேவைப்படும் பொருள்கள்:

இட்லி மாவு- 2 கிண்ணம்
துருவிய சீஸ்- 4 மேசைக் கரண்டி
தக்காளி- 2
நறுக்கிய குட மிளகாய்- 4 மேசைக் கரண்டி
நறுக்கிய கொத்துமல்லித் தழை- 2 மேசைக் கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு


செய்முறை: 

தக்காளியைப் பொடியாக நறுக்கி ஒரு கப்பில் போட்டு, அத்துடன் நறுக்கிய குட மிளகாய் துருவிய சீஸ், கொத்துமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டு கலந்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை லேசாகத் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றில், கிண்ணத்தில் உள்ள கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து அதன் மேலே தூவி ஓரங்களில் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.

லோ.சித்ரா

முழு கட்டுரையைப் படிக்க →