முகப்பு
மகளிர்மணி

தக்காளி வெங்காய பராத்தா 

சப்பாத்திக்கு மாவை பிசைந்துக் கொள்ளவும். மீதி எல்லாவற்றையும் மாவுடன் கலக்கி, தேவைக்கேற்ப நீரை விடவும்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
எண்ணெய்- 1 மேசைக் கரண்டி
பொடியாக நறுக்கிய தக்காளி- அரை கிண்ணம்
வெங்காயம்- 1 கிண்ணம்
மல்லித் தழை- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

Advertisement

சப்பாத்திக்கு மாவை பிசைந்துக் கொள்ளவும். மீதி எல்லாவற்றையும் மாவுடன் கலக்கி, தேவைக்கேற்ப நீரை விடவும். பிறகு சப்பாத்தி மாவில் சிறிது எடுத்து இரண்டு மெல்லிய சப்பாத்தியை இட்டு, ஒரு சப்பாத்தியின் மேல் தக்காளி கலவையைப் பரப்பி அதன்மேல்  மற்றொரு சப்பாத்தியால் மூடவும். ஓரங்களைத் தண்ணீர் தொட்டு அழுத்திவிடவும். செய்து வைத்துள்ள பராத்தாவைப் போட்டு இரு புறமும் எண்ணெய்விட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். இதை  சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.