முகப்பு
மகளிர்மணி

தக்காளி சேமியா கிச்சடி

வெறும் வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து எடுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் போட்டு நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

தேவையான பொருள்கள்:

தக்காளி-2
சேமியா- 2 கிண்ணம்
பச்சை மிளகாய்- 2
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்- 1
கேரட் துருவல்- 3 மேசைக் கரண்டி
உடைத்த முந்திரித் துண்டுகள்- 
2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை- சிறிதளவு
எண்ணெய்- 6 மேசைக் கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை: 

Advertisement

வெறும் வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து எடுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி மிக்ஸியில் போட்டு நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் 5 மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலைப் பருப்பு, உளுந்து பருப்பு, முந்திரி சேர்த்து வறுக்கி நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்ததும் அரைத்த தக்காளி விழுது, சேமியா, பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். பிறகு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.