முகப்பு
மகளிர்மணி

மதூர் வடா (கர்நாடகம்)

தயிருடன் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ரவையைக் கொட்டி கிளறவும், ரவை வெந்து வரும்போது, அடுப்பை அணைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

ரவை, புளித்த கெட்டித் தயிர்- தலா 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை: 

தயிருடன் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ரவையைக் கொட்டி கிளறவும், ரவை வெந்து வரும்போது, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் உப்பு, அரிந்த பச்சை மிளகாய், துருவிய இஞ்சி,  கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். சம அளவு உருண்டைகளாக்கவும். சூடான எண்ணெயில் வடைகளைத் தட்டி பொரித்தெடுக்கவும். 

முழு கட்டுரையைப் படிக்க →