மகளிர்மணி

ரவா அடை

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.

லோ. சித்ரா

தேவைப்படும் பொருள்கள்:

ரவை அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
எண்ணெய் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு, தேவையான அளவு
கடுகு கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் கால் தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ஒரு கிண்ணம் தண்ணீர்விட்டு ரவை, உப்பு சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் கெட்டியாகக் கிளறி இறக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ரவை கலவையை சிறு உருண்டைகளாகத் தட்டிப் போட்டு இரண்டு புறமும் எண்ணெய்விட்டு  திருப்பிப் போட்டு எடுக்கவும். ரவா உப்புமா சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு இந்த ரவா அடை வித்தியாசமான சுவையில் ஈர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT