முகப்பு
மகளிர்மணி

முட்டை பழத்தின் நன்மைகள்

முட்டை பழத்தில் அதிக அளவில் வைட்டமின்கள்,  தாதுக்கள்,  பிற சத்துகள் உள்ளன. இதில் உள்ள  இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2023 at 12:00 AM
பகிர்:

முட்டை பழத்தில் அதிக அளவில் வைட்டமின்கள்,  தாதுக்கள்,  பிற சத்துகள் உள்ளன. இதில் உள்ள  இரும்புச் சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.  இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.  வைட்டமின் சி,  அதாவது அஸ்கார்பிக் அமிலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது.  இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

முட்டை பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. நியாசினமைடு என்ற ரசாயன பொருள் நீரழிவு நோயை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

முட்டை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி, ஏ சத்துகள்புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் வராமல் தடுக்கிறது.  அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும்,  மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனேற்றப்பட்ட  ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது . இது அல்சைமர் நோய், டிமென்ஷியா போன்ற நரம்பு மண்டல கோளாறு சம்பந்தமான நோய்கள் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.