முகப்பு
மகளிர்மணி

பேபி உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரிக்க வேண்டும். கெட்டியாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

Updated On : 27 ஆகஸ்ட், 2023 at 12:00 AM
பகிர்:

தேவையானவை:

சின்ன உருளைக்கிழங்கு' 400 கிராம்
வெண்ணெய்' 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம்'4
பச்சை மிளகாய்' 4
மிளகுத் தூள், தக்காளி சாஸ், மைதா மாவு' தலா 2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள்' 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு அரைத்த விழுது' 1 தேக்கரண்டி
கொத்தமல்லி' 1 பிடி
உப்பு, எண்ணெய்' தேவையான அளவு

செய்முறை:  

Advertisement

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரிக்க வேண்டும். கெட்டியாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் ஒரு தேக்கரண்டி போட்டு காய்ந்ததும் வெந்த உருளைக்கிழங்கை மைதா கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளமாக வெட்ட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி , வெண்ணெய் போட்டு அடுப்பில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் தக்காளி சாஸ், கரம் மசாலாத் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதில் பொரித்து வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்டு, நன்றாக வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.