மகளிர்மணி

பழையனவும் பயன்படுமே..!

டூத் பிரஷை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசாமல், அதை வீடுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

டூத் பிரஷை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசாமல், அதை வீடுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம். 

இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போன்று தங்கிவிடும்.  மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸ் சுத்தம் செய்யும்போது டூத் பிரஷால் இடுக்குகளில் தேய்த்துத் துடைத்தால் அழுக்கு நீங்கி தரை முழுவதும் சுத்தமாகும்.

சீப்பை சுத்தம் செய்வதற்கு சூடான நீரில் சோப்புத் தூளை கலந்து அதில் சீப்பை ஊற வைக்கவும். பின்பு சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் உள்ள அழுக்குகளை தேய்த்து எடுத்தால் சீப்பில் உள்ள அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும்.

எண்ணெய் பசை படிந்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா, சோப்புத் தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால் தேய்த்து துடைத்தால் எண்ணெய் பசைகள் நீங்கிவிடும்.

ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் பிரஷை வைத்து தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். நன்கு சுத்தம் செய்த பிறகு ஷூக்கு பாலிஷ் போட்டால் ஷூக்கள் புதிது போல் இருக்கும்.

புருவம், மீசைகளை தவறாமல் சுத்தமான பிரஷால் சரி செய்யும்போது புருவம், மீசை அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.   வெதுவெதுப்பான நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்து கழுவி விட்டு பின்பு பிரஷால் மெதுவாக நக இடுக்குகளில் சுத்தம் செய்தால் நகங்கள் சுத்தமாகும்.

 கதவு, ஜன்னல் இடுக்குகளில் ஒட்டடை மற்றும் அழுக்கு சேர்ந்திருக்கும். பூ வேலைப்பாடுகள் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளின் ஓரங்களில் இருக்கும் அழுக்கை சாதாரணமாக துடைக்க முடியாது. அதற்கு பிரஷ் மூலம் இடுக்குகளில் உள்ள அழுக்கை தேய்த்தால் அழுக்கு நீங்கிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT