மகளிர்மணி

சேமியா கட்லெட்

முதலில் உருளைக்கிழங்கு, காரட் மசித்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

சேமியா- 200 கிராம்
உருளைக்கிழங்கு- 3
காரட்- 3
வெங்காயம்- 4
மைதா - 50 கிராம்
ரஸ்க் தூள்- 50 கிராம்
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
சீரகம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

முதலில் உருளைக்கிழங்கு, காரட் மசித்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்க வேண்டும். சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிதட்டில் போட்டு வடித்து வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும். அதில், மசித்த உருளைக் கிழங்கு, காரட், வடிகட்டிய சேமியா போட வேண்டும். மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாகக் கரைத்து கொள்ள வேண்டும். 

காய்கறி கலவையை உருண்டையாக உருட்ட வேண்டும்.  உருண்டையை மைதாவில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டி தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT