மகளிர்மணி

சமையல் குறிப்புகள்..

சமையல் அறையில் புதினாச் செடியை வளர்த்து வந்தால் சிலந்தி, பூச்சிகள் வராது.

தினமணி

சமையல் அறையில் புதினாச் செடியை வளர்த்து வந்தால் சிலந்தி, பூச்சிகள் வராது.

இரவில் படுப்பதற்கு முன் பிளீச்சிங் பௌடரை சமையல் அறையின் மூலைகளில் போட்டுவிட்டால், கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.

காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

எலுமிச்சை சாற்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து, தேய்க்க குழாய்கள் பளிச்சிடும்.

வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.

மோர்க் குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்துப் போட்டுவிட்டால் ருசியாக இருக்கும்.

பிட்ரூட் சூப் செய்யும்போது, தக்காளியையும் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.

கீரையை சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தால் சத்து வீணாகாது.

சூடான உணவுப் பொருள்களில் எலுமிச்சையைச் சேர்த்தால், உணவு கசப்பாகிவிடும். சூடு ஆறியவுடன் சேர்ப்பதுதான் சரி.

கேசரி தயாரிக்கும்போது இரு பேரீச்சம் பழங்களை பொடியாக அரிந்து போட்டால், சுவை சற்று கூடுதலாக  இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT