முகப்பு
மகளிர்மணி

மசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி

எல்லா வகை அரிசி,  உளுந்து,  அவல், வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவேண்டும். அரைத்தமாவை 10 முதல் 12 மணி நேரம் வைத்து புளிக்கவிடவேண்டும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:


தேவையான பொருள்கள்:

காளான் - ஒருபாக்கெட்
பச்சை அரிசி - ஒரு கிண்ணம்
புழுங்கல்அரிசி - 3 கிண்ணம்
அவல் - ஒரு மேசைக் கரண்டி
உளுந்து - ஒரு கிண்ணம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - அரை கிண்ணம்
இஞ்சி - ஒரு அங்குலம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி பேஸ்ட் - அரை கிண்ணம்
டோபு - 100  கிராம்
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 7
பூண்டு - 5 பல்
மிளகாய் தூள் - 3/4  தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
புதினா - ஒரு மேசைக் கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு மேசைக் கரண்டி

செய்முறை:  

எல்லா வகை அரிசி,  உளுந்து,  அவல், வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவேண்டும். அரைத்தமாவை 10 முதல் 12 மணி நேரம் வைத்து புளிக்கவிடவேண்டும். சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, 2 பச்சை மிளகாய், மிளகாய் தூள் ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  பிறகு அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  இப்பொழுது காளான், தக்காளி பேஸ்ட்,  புதினா, கொத்தமல்லி தூள்,  சீரகத் தூள், கரம் மசாலா தூள்,  உப்பு ஆகியன சேர்த்துவதக்கவும். கடைசியாகத் துருவிய டோபு, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இட்லி தட்டில் அரைத்து புளிக்க வைத்துள்ள மாவை முழுவதும் இல்லாமல் முக்கால் பாகம் ஊற்றி ஒரு உருண்டை ஒரு இட்லி வீதம் நடுவில் வைத்து வேக வைக்கவும். சுவையானசத்தான ஸ்டஃப்டு இட்லி தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →