முகப்பு
மகளிர்மணி

காளான் மிளகு வறுவல்

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு சேர்த்து பொரித்துகொள்ளவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் -2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மல்லித் தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -தேவையானஅளவு
மிளகுத்தூள் -2 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
க.எண்ணெய் -தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு சேர்த்து பொரித்துகொள்ளவும்.  பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு விழுது,  தக்காளி, காளான் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள்,  மிளகாய்த் தூள், மல்லித்தூள், சோம்புத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து காளான் நன்றாக வதங்க சிறிது நீரை தெளித்துவிடவும்.  கடைசியில் அடுப்பில் இருந்து காளானை இறக்கும்பொழுது,  2 தேக்கரண்டி மிளகு தூள் தூவி இறக்கவும். சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →