முகப்பு
மகளிர்மணி

லௌக்கி டேப்லா (மகாராஷ்டிரா)

துருவின சுரைக்காயுடன் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

தேவையான பொருள்கள்: 

கோதுமை மாவு- 2 கிண்ணம்
துருவின சுரைக்காய்- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கொத்துமல்லி- சிறிதளவு
மிளகாய்த் தூள், தனியாத் தூள்- 
தலா 2 மேசைக் கரண்டி

செய்முறை: 

துருவின சுரைக்காயுடன் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இதை 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். வடிகட்டின சுரைக்காயுடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்துமல்லி, மிளகாய்த் தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். அப்பளங்களாகத் திரட்டி, சூடான வாணலியில் போட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →