முகப்பு
மகளிர்மணி

புளி பொங்கல்

அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

தேவையானவை: 

அரிசி-  250 கிராம்
புளி- 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள்- சிறிதளவு
கடலைப்பருப்பு - 2  தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய்- 100 மில்லி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  

அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு,  கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும். புளிப்பும், காரமுமாக, நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →