முகப்பு
மகளிர்மணி

வெண் பொங்கல்

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

தேவையானவை: 

அரிசி - 250 கிராம்
நெய்- 100 மில்லி
பாசிப் பருப்பு - 100 கிராம்
மிளகு-  20
இஞ்சி-  ஒரு சிறிய துண்டு
வறுத்த முந்திரிப் பருப்பு -10
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு-  தேவையான அளவு.

செய்முறை: 

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி  பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்,  வெண் பொங்கல் தயார். 

முழு கட்டுரையைப் படிக்க →