மகளிர்மணி

போளி, பூரணம் செய்யும் முன்...!

கடலைப் பருப்பைப் போளி செய்யும்போது பூரணத்தில் வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரை சேர்த்தால் போளி மெலிதாகவும், வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

ஆர்.ராமலெட்சுமி

கடலைப் பருப்பைப் போளி செய்யும்போது பூரணத்தில் வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரை சேர்த்தால் போளி மெலிதாகவும், வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

தேங்காய்ப் பூரணம், உளுந்து பூரணம் போல பருப்பு உசிலி, வேக வைத்த காய்கறிகள், வேக வைத்த பயறு வகைகள், ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சை போன்றவைகளையும் பூரணம் ஆக வைத்துப் போளி செய்யலாம்.

பிரெட்டை உதிர்த்து முந்திரி, பாதாம் துண்டுகள், மில்க் மெய்டு கலந்தும் பூரணம் செய்யலாம். மேல் மாவுக்கு மைதா மாவைப் பயன்படுத்துவது போன்று, கோதுமை மாவு, ரவையையும் பயன்படுத்தலாம்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், இட்லி, மிளகாய்ப் பொடியை வதக்கி, காரப் பூரணம் செய்யலாம்.

தேங்காய்ப் பூரணத்துக்குத் தேங்காய்த் துருவலை சிறிது நெய்யில் வதக்கிவிட்டுச் செய்தால் சீராக வரும். மணமும் சுவையும் கூடும்.

போளி செய்யும்போது மேல் மாவை வெண்ணெய் கொண்டு பிசைந்து செய்தால் போளி மென்மையாக வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியல் பொழுது... அனுஷா ஹெக்டே!

ராதை மனதில்... ஆதிரை!

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

SCROLL FOR NEXT