முகப்பு
மகளிர்மணி

கோலி புலாவ் (பஞ்சாப்)

கடலை மாவுடன் திட்டமாக நீர், உப்பு சேர்த்து,  கரைத்து வைக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவை கரகரப்பாக அரைக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:46 PM
பகிர்:

தேவையான அளவு:

பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 10
சர்க்கரை போடாத கோவா- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்- 2
கடலை மாவு- அரை கிண்ணம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
நெய்- 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது- 2 மேசைக்கரண்டி
கரம் மசாலா- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

கடலை மாவுடன் திட்டமாக நீர், உப்பு சேர்த்து,  கரைத்து வைக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவை கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் கோவா, உப்பு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து கலந்து உருண்டையாகக் கலக்கவும். கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கடாயில் நெய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா சேர்த்து பிரட்டவும். பாசுமதி சாதம், உருண்டையாகச் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →