முகப்பு
மகளிர்மணி

முப்பருப்பு வடை

மூன்று பருப்புகளையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைத்து, மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

Dinamani
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:


தேவையான பொருள்கள்:

கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 100 கிராம்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் 2
மிளகுத்தூள் 2 சிட்டிகை
கறிவேப்பிலை சிறிது
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

மூன்று பருப்புகளையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைத்து, மிக்சியில் கெட்டியாக அரைக்கவும். மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். இவைகளை அரைத்த மசாலாவுடன் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். கலவையை உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து நடுத்த அளவு வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான முப்பருப்பு வடை தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →