முகப்பு
மகளிர்மணி

அமெரிக்க பெண் எம்.பி.யின் இந்தியப் பற்று

தீபாவளி  பண்டிகைக்கு அமெரிக்காவில் பொதுவிடுமுறை அளிக்க வலியுறுத்தி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த பெண் எம்.பி. கிரேஸ் மெங்கை இந்திய வம்சாவளியினர் கொண்டாடி வருகின்றனர்.

Updated On : 9 ஜூலை, 2023 at 12:00 AM
பகிர்:

தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொதுவிடுமுறை அளிக்க வலியுறுத்தி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த பெண் எம்.பி. கிரேஸ் மெங்கை இந்திய வம்சாவளியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தீபாவளியைக் கொண்டாடிவருவது வியப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், தீபாவளிக்கு அமெரிக்காவில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றமான பிரதிநிதிகள் சபையில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் மசோதாவை அண்மையில் கொண்டு வந்தார்.இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி, அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடும்போது சட்டமாக அமலாகும்.

Advertisement

இவரது முயற்சியை பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.