முகப்பு
மகளிர்மணி

அவரை வற்றல்

அவரைக்காயைக் காம்பு ஆய்ந்து கழுவி சில நாள்கள் வெயிலில் காய வைக்கவும்.   தேவையான உப்பைப் போட்டு, கிளறி வற்றலை தயிரில் போட்டு கலந்து ஈயப் பாத்திரத்தில் ஓர் இரவு முழுவதும் ஊறும்படி வைக்கவும்.

Updated On : 16 ஜூலை, 2023 at 5:45 PM
பகிர்:

தேவையானவை:

அவரைக்காய்- 1,400 கிராம்
புளித்த தயிர்- 125 கிராம்
மோர்- 60 கிராம்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

Advertisement

அவரைக்காயைக் காம்பு ஆய்ந்து கழுவி சில நாள்கள் வெயிலில் காய வைக்கவும்.   தேவையான உப்பைப் போட்டு, கிளறி வற்றலை தயிரில் போட்டு கலந்து ஈயப் பாத்திரத்தில் ஓர் இரவு முழுவதும் ஊறும்படி வைக்கவும்.  மறுநாள் வெயிலில் காயப் போட்டு நன்றாகக் காய்ந்தவுடன் சேமித்து வைக்கவும். வற்றல் குழம்பு வைக்கலாம். எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம். கொத்தவரை, தக்காளிக்காய், காலி ஃபிளவர், முட்டைகோஸ் இலை முதலியவற்றை இந்தமுறையில் போட்டு உபயோகிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.