மகளிர்மணி

பெண்கள்  பிரச்னைகளுக்கான தீர்வுகள்!

அத்திப் பழங்களில் கொழுப்புச் சத்து கிடையாது.  உடல் எடையைக் குறைய வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆர். ஜெயலட்சுமி

அத்திப் பழங்களில் கொழுப்புச் சத்து கிடையாது.  உடல் எடையைக் குறைய வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் பி,  சி நிறைந்துள்ளன. இதில் உள்ள 'ட்ரிப்டோபன்'  எனும் வேதிப்பொருள் தூக்கத்தைத் தூண்டும் தன்மையுடையது.

உடல் கழிவுகளை அகற்ற பெரிதும் உதவுகின்றன.  தினம் சாப்பிட்டால்,  வயதானத் தோற்றம் சீக்கிரம் தோன்றாது.

காய்ந்த அத்திப்பழங்களைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் சீராகும்.  வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும்.

அத்திப்பழங்களில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணப்படுத்த உதவும்.  குறிப்பாக,  அத்திப்பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு இந்தப் பழங்களை தருவதன் மூலம் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவர் அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் நீக்கப்படும் இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். நெடுநாளாக இதுமாதிரி தொந்தரவு உள்ளவர்களுக்கு அத்திப்பழம் ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.

அத்திப்பழங்கள் ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. 

எக்ஸிமா சோரியாசிஸ் போன்ற பல்வேறு சருமப் பிரச்னைகளுக்கு அத்திப்பழம் மருந்தாகும்.  தோலில் ஏற்படும் வெண்புள்ளிகள்,  வெண்குஷ்டம் போன்ற பல பிரச்னைகளைக் குணமாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT