முகப்பு
மகளிர்மணி

வெற்றிலை ரசம்

மிளகு,  சீரகத்தை  கொரகொரப்பாகப் பொடிக்கவும். பூண்டு, இஞ்சியையும் சேர்த்து நன்றாக அரைத்து, புளியை கரைத்து விட்டு, தக்காளியை சேர்த்து நன்றாகப் பிசைந்து,  உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

வெற்றிலை  4
மிளகு  1 தேக்கரண்டி
சீரகம்  1 1/2 தேக்கரண்டி
பூண்டு   10 பல்
இஞ்சி  1 துண்டு
புளி  எலுமிச்சை அளவு
தக்காளி  2
உப்பு  சிறிதளவு
எண்ணெய்  தாளிக்க
கடுகு  1/4  தேக்கரண்டி
கறிவேப்பிலை  ஒரு கொத்து
மிளகாய் வற்றல்  5
பெருங்காயம்  1 சிட்டிகை
மஞ்சள் தூள்  1/4  தேக்கரண்டி
கொத்தமல்லி இலை  சிறிதளவு

செய்முறை: 

மிளகு,  சீரகத்தை  கொரகொரப்பாகப் பொடிக்கவும். பூண்டு, இஞ்சியையும் சேர்த்து நன்றாக அரைத்து, புளியை கரைத்து விட்டு, தக்காளியை சேர்த்து நன்றாகப் பிசைந்து,  உப்பு, தண்ணீர் சேர்க்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, அரைத்த  சாமான்களை போட்டு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, புளியை விட்டு,  வெற்றிலை, நறுக்கி போட்டு,கொத்தமல்லி இலையை தூவி மிதமான தீயில் கொதிக்க வைத்து, நுரைத்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம் தயார்.  

முழு கட்டுரையைப் படிக்க →