முகப்பு
மகளிர்மணி

மாங்காய் அடை

இனிப்பும் புளிப்பும் கலந்த மாதிரி இருக்கும் கிளிமூக்கு மாங்காயின் தோலை சீவி துருவவும்,  உருளைக்கிழங்கை தோலை சீவி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

Updated On : 25 ஜூன், 2023 at 12:00 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

கிளிமூக்கு மாங்காய்  1
உருளைக்கிழங்கு   2 
புழுங்கலரிசி  2 டம்ளர்
பச்சை மிளகாய்  2
இஞ்சி  1 துண்டு 
துருவிய தேங்காய்  1/4  கிண்ணம்
உப்பு   தேவையான அளவு 
கடுகு  1/4  தேக்கரண்டி
கறிவேப்பிலை  2 துண்டு
பெருங்காயம்  சிறிதளவு 

செய்முறை: 

Advertisement

இனிப்பும் புளிப்பும் கலந்த மாதிரி இருக்கும் கிளிமூக்கு மாங்காயின் தோலை சீவி துருவவும்,  உருளைக்கிழங்கை தோலை சீவி தண்ணீரில் போட்டு வைக்கவும்.  புழுங்கலரிசியை களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியவுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.  பாதி அரைபட்டதும் துருவிய மாங்காய், உருளைக்கிழங்கு,  தேங்காய், உப்பு சேர்த்து கரகரப்பான அடைமாவு பக்குவத்தில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து மாவில் போட்டு, சிறிய அடைகளாக தட்டி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.