முகப்பு
மகளிர்மணி

அறுசுவையின் மருத்துவக் குணங்கள்

உணவில் அறுசுவைகள் உண்டு. ஒவ்வொரு சுவைக்கும் என்னென்ன மகத்துவமும், மருத்துவக் குணங்களும் உண்டு.

Updated On : 25 ஜூன், 2023 at 12:00 AM
பகிர்:

உணவில் அறுசுவைகள் உண்டு. ஒவ்வொரு சுவைக்கும் என்னென்ன மகத்துவமும், மருத்துவக் குணங்களும் உண்டு.

காரம்: உடல் உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளைத் தூண்டும். மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் அதிகக் காரச் சுவை உள்ளது.

கசப்பு: பாகற்காய்,  வெந்தயம், வேப்பம்பூவில் மிகுதியாக இருக்கிறது. தேவையற்ற கிருமிகளை அழித்து, உடலுக்குச் சக்தியைக் கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.

Advertisement

இனிப்பு: தசையை வளர்க்கும்.

புளிப்பு: ரத்தக் குழாயில் கழிவை நீக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், அவரை, அத்திக்காய் ஆகியவற்றில் அடங்கியுள்ளன.

துவர்ப்பு: ரத்தம் வெளியேறாது தடுக்கும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காயில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகச் சக்தியைக் கூட்டும். அளவு கூடினால் கெடுதலை ஏற்படுத்தும். கீரைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.