அவல் லட்டு
அவல், பொட்டுக்கடலை ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்து மிகவும் பொடியாகப் பொடித்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
அவல் - 200 கிராம்
பொட்டுக் கடலை- 100 கிராம்
முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 10
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
பால் - 1 மேசைக்கரண்டி
நெய் - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 மேசைக் கரண்டி
செய்முறை:
Advertisement
அவல், பொட்டுக்கடலை ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்து மிகவும் பொடியாகப் பொடித்து கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, காய்ந்த திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் அவல், பொட்டுக் கடலை மாவு, பொடித்து வைத்திருக்கும் முந்திரிக் கலவை, ஏலப்பொடி, பால், நெய் ஆகியன சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவில் லட்டுகளாக உருட்டி , உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.