மகளிர்மணி

முந்திரி ஜாமுன்

முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, ஏலக்காயை பொடித்துகொள்ள வேண்டும்.  பாலைக் காய்ச்ச வேண்டும்.

தினமணி

தேவையான பொருள்கள்:

பால் - அரை லிட்டர்
முந்திரி - 10
சர்க்கரை - 300 கிராம்
ரவை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிது
நெய் - 100 கிராம்
உப்பு - துளி

செய்முறை: 

முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, ஏலக்காயை பொடித்துகொள்ள வேண்டும்.  பாலைக் காய்ச்ச வேண்டும்.  அதில், அரைத்த முந்திரிப் பருப்பையும் பொடி செய்த சர்க்கரையுடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாகக் கிளற வேண்டும். 

ரவை, மைதா, உப்பு ஆகியவற்றுடன் டால்டா அல்லது நெய் விட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசைந்து சின்ன உருண்டைகளாக்கி சிறுசிறு பூரிகளாகச் செய்ய வேண்டும். ஒரு பூரியின்  நடுவில் நெல்லிக்காய் அளவு முந்திரிக் கலவையை வைத்து அதன் மீது இன்னொரு பூரியை வைத்து அதன் ஓரங்களை முள் கரண்டியால் வெட்டி எடுத்துவிட்டு எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகு காய்ச்சி இறக்க வேண்டும். பாகில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து, பின்னர் பூரிகளைப் போட வேண்டும். சிறிது ஊறியதும் குலோப் ஜாமுன் போல எடுத்துச் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT