முந்திரி கத்லி
முந்திரிப் பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
முந்திரிப் பருப்பு, சர்க்கரை- தலா 100 கிராம்
ரோஸ் எசன்ஸ்- சில துளிகள்
நெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
Advertisement
முந்திரிப் பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, அரைத்த முந்திரி விழுது போட்டு நன்றாகக் கிளற வேண்டும். சுருண்டு வரும்போது எசன்ஸ் சேர்க்க வேண்டும். நெய்யைவிட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் போட்டு ஆறியவுடன் கத்தியால் துண்டுகள் போட வேண்டும்.