மகளிர்மணி

நவராத்திரி கொலுவின் தத்துவம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒவ்வொரு  படியிலும் ஒரு தத்துவம் உள்ளது. ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

நவராத்திரி கொலு வைப்பதில் ஒவ்வொரு படியிலும் ஒரு தத்துவம் உள்ளது. ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

முதல் படி: ஓரறிவு உயிர்ப் பொருள்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவரப் பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

இரண்டாம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

மூன்றாவது படி: மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

நான்காவது படி: நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஐந்தாவது படி: ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

ஆறாவது படி: ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளின் இடம்பெற வேண்டும்.

ஏழாவது படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

எட்டாவது படி: தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் இடம்பெற வேண்டும்.

ஒன்பதாவது படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகள், அவர்களது தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடுநாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று, கடைசியில் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழிவின் விளிம்பில் கழுகுகள்!

திருத்தணியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

ஜனநாயகத்தின் பெயரால்...

ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

SCROLL FOR NEXT