மகளிர்மணி

சமையல் குறிப்புகள்..

முக்கிமலை நஞ்சன்

தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். 

கொத்துமல்லி அழுகாமலும் பச்சையாகவும் இருக்க வேண்டுமானால், அதன் வேரை நறுக்கிவிட்டு மெல்லியத் துணியில் சுற்றி ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இரு வாரங்கள் கூட புதிதுபோல இருக்கும்.

முருங்கைக் கீரையை பொரியலுடன் ஒரு கோழி முட்டையைச் சேர்த்துகொண்டால் அது சத்தான உணவாக அமையும்.

தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.

சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல. 

உறை ஊற்றியவுடன் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது.

நன்கு புளித்தத் தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. 

புளி சாதம் தாளிக்கும்போது, சிறிது எள் பொடி சேர்த்து தாளித்தால் அதன் சுவை நமன்றாக இருக்கும்.

அரிசி வடகம் போடும்போது,  சிறிது பால் சேர்த்துகொண்டால் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

SCROLL FOR NEXT