மகளிர்மணி

போஜ்புரி ஆலு (பீகார்)

ஒரு பூண்டை மிகப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், 3 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும்.

நொளம்பூர் ர.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு 4
தக்காளி, வெங்காயம்தலா  2
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 4 பல்
பச்சை மிளகாய் 5
முந்திரி 10
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் கால் கிண்ணம்
உப்பு தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பூண்டை மிகப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், 3 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, வட்ட வில்லைகளாக நறுக்கவும், சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். நீரை வடித்து நெய்யில் வறுக்கவும். 

3 தேக்கரண்டி நெய்யை வாணலியில் சேர்க்கவும். அரைத்த விழுது, உப்பு, பொரிந்த உருளைக்கிழங்கு, தேவையான தண்ணீர் சேர்க்கவும். தளதளவென்று கொதித்ததும் அடுப்பை அணைக்கவும், 1 தேக்கரண்டி நெய்யில் நறுக்கிய பூண்டை சேர்த்து பொரித்து மேலாகச் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT